×

தொழிலாளியை அரிவாளால் தாக்கிய 3 பேர் கைது

தூத்துக்குடி, ஜூன் 8: புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதுக்கோட்டை, குலையன்கரிசல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் குலையன்கரிசல் நடுத்தெருவைச் சேர்ந்த பூலோகபாண்டி மகன் இளையராஜா(34), பொன்சேகர் மகன் சுதாகர்(31) மற்றும் குலையன்கரிசல், பாண்டியாபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் அழகுபூபதி(28) என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்த ஒரு கூலித்தொழிலாளியை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து, அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, இளையராஜா, சுதாகர், அழகுபூபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தொழிலாளியை அரிவாளால் தாக்கிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Pudukkottai ,Inspector ,Vanasunder ,Mundinam ,Pudukkottai, Kulayangarisal ,Kulayankrisal ,
× RELATED புதுக்கோட்டையில் போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி துரை சுட்டுக் கொலை!