×

குருபரஅள்ளி சாலையில் வேகத்தடை வேண்டும்

கடத்தூர், ஜூன் 8: கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருபரஅள்ளி-தென்கரைக்கோட்டை சாலையில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, 20க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் இந்த சாலை வழியாக வந்து செல்கிறது. குருபரஅள்ளி, தென்கரைக்கோட்டை, தர்மபுரி மூன்று பிரிவு சாலையில் அதிகப்படியான வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து இராமியணஅள்ளி கிராம மக்கள் கூறுகையில், ‘இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. அதிவேகமாக வரும் பஸ்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் பலர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்துகளை தடுக்க பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்,’ என்றார்.

The post குருபரஅள்ளி சாலையில் வேகத்தடை வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kuruparaalli road ,Kadoor ,Aroor ,Paprirettipatti ,Dharmapuri ,Kuruparaalli-Thenkaraikot road ,Guruparaalli road ,Dinakaran ,
× RELATED மைத்துனரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது