×

கஞ்சா விற்ற இருவர் கைது

ரெட்டியார்சத்திரம், ஜூன் 8: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே ஆலத்தூரன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் சதீஷ்குமார் (26). இவருடைய நண்பர் ராமபுரம் பாண்டி. இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கன்னிவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னிவாடி எஸ்ஐ சிராஜூதீன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, இவர்கள் இருவரும் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். போலீசார் இவர்களை விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

The post கஞ்சா விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Rediyarchatram ,Ponnuchami ,Sathish Kumar ,Aladhuranpatti West Street ,Kanniwadi ,Redtiyarchatram Union ,Ramapuram Pandi ,
× RELATED ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?