×

மோடி அரசு நீண்டகாலம் நீடிக்காது: நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு

புதுடெல்லி: பிரபல பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர். இவர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர். இவர் தொடர்ந்து மோடி அரசைப்பற்றி விமர்சனம் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக அவரது மனைவி வகிக்கும் நிதித்துறை செயல்பாடுகளை காட்டமாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்தும், முதன்முறையாக பெரும்பான்மை பலம் இல்லாமல் மோடி ஆட்சிப்பொறுப்பை ஏற்பது குறித்தும் பரகலா பிரபாகர் கூறியிருப்பதாவது: தேர்தல் முடிவுகள் மோடி கன்னத்தில் கொடுக்கப்பட்ட இறுக்கமான அறை. மோடியின் செயல், அவர் அரசை நடத்தும் விதம், அவரது அமைச்சரவையின் செயல்பாடுகளை மக்கள் விரும்பவில்லை. இந்த கூட்டணி ஆட்சி நீடிக்க வேண்டுமானால் மோடி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் தன்னை மாற்றிக்கொள்வாரா, இல்லையா என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. எனவே புதிய அரசு நீண்ட காலம் நீடிக்காது. இவ்வாறு தெரிவித்தார்.

The post மோடி அரசு நீண்டகாலம் நீடிக்காது: நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Nirmala Sitharaman ,New Delhi ,Parakala Prabhakar ,Union Finance Minister ,
× RELATED ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை