×

முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ‘ஹமாரே பாரா’ (நமக்கு 12) என்ற இந்தி திரைப்படத்தை திரையிட கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. கர்நாடக அரசின் உத்தரவில், மின்னணு ஊடகங்கள், சமூக ஊடகங்கள், திரையரங்குகள், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அல்லது பிற ஊடகங்களில் படம் மற்றும் அதன் டிரெய்லரை வெளியிடுவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள திரைப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என பல முஸ்லிம் அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அத்தகைய படத்திற்கு அனுமதி வழங்குவது மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே வெறுப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை குறிவைத்து, அமைதியை சீர்குலைக்கவும், முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தவும் சதி நடப்பதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

The post முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Muslims ,Karnataka ,BENGALURU ,Karnataka government ,
× RELATED போதை பொருள் வழக்கில் கைதான நடிகை ஹேமா...