×

நடிகை கங்கனாவை அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு

சண்டிகர்: இமாச்சலப்பிரதேசம், மண்டி தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றார். வெற்றி பெற்று 2 நாட்கள் ஆன நிலையில் டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவத்தை சேர்ந்த சிஐஎஸ்எப் பெண் காவலர் குல்விந்தர் கவுர், கங்கனாவை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் போராட்டத்தின்போது கங்கனா கூறிய கருத்துக்களால் அதிருப்தியில் இருந்த பெண் காவலர் அவரை அடித்ததாக கூறப்படுகின்றது.

இது குறித்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட பெண் காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்ஐஎப் பெண் காவலர் குல்விந்தர் கவுருக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்டவை பெண் காவலருக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளன. முறையான விசாரணை கோரப்படும் என்றும் குல்விந்தர் கவுருக்கு எந்த அநீதியும் இழைக்கக்கூடாது என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

The post நடிகை கங்கனாவை அறைந்த சிஐஎஸ்எப் பெண் காவலருக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : CISF ,Kangana ,Chandigarh ,Kangana Ranaut ,BJP ,Mandi ,Himachal Pradesh ,Chandigarh airport ,Delhi ,
× RELATED என்னை அறைந்த பெண் காவலரை பாராட்டினால்...