×

விருத்தாசலம் அருகே  விபத்தில் கணவன், மனைவி பலி

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சித்தேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் (70). இவரது மனைவி வேம்பு (65). இவர், நேற்று சேலம் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டு திரும்ப ஊருக்கு வந்துள்ளார். இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் விருத்தாசலம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்துள்ளார். அந்த நேரத்தில் தனது ஊருக்கு பேருந்து வசதி இல்லாததால் கணவருக்கு போன் செய்து வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக காசிநாதன் தனது மொபட்டை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து வேம்புவை பின்னால் அமர வைத்துக்கொண்டு சித்தேரிக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

புதுக்குப்பம் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட்டின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மொபட்டில் இருந்த வேம்பு சுமார் 20 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து இறந்தார். காசிநாதன் படுகாயமடைந்து மேம்பாலத்தின் மேலேயே கிடந்துள்ளார். அவரை வாகனஓட்டிகள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காசிநாதனும் இறந்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post விருத்தாசலம் அருகே  விபத்தில் கணவன், மனைவி பலி appeared first on Dinakaran.

Tags : Virthashalam ,Virudthasalam ,Kasinathan ,Sitterikupam ,Vidathasalam ,Cuddalore district ,Wembu ,Salem Eye Hospital ,
× RELATED மொபட் மீது வாகனம் மோதி விபத்து...