×

மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ்(39). இவரது மனைவி வெங்கடலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். நாகேஸ்வரராவ் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.

இதற்காக குடும்பத்தினருடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் பள்ளி விடுமுறையையொட்டி மனைவி வெங்கடலட்சுமி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளார். இதனால் நாகேஸ்வரராவ் குடியிருப்பில் தனியாக தங்கியிருந்தார். இந்நிலையில் நாகேஸ்வரராவ் நேற்றிரவு மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது போனில் பேசியபடியே திடீரென கதவை தாழிட்டுக்கொண்டு போனை நாகேஸ்வரராவ் ‘சுவிட்ச் ஆப்’ செய்ததாக கூறப்படுகிறது.

தனால் சந்தேகமடைந்த அவரது மனைவி, அக்கம் பக்கத்தினருக்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர்கள் சென்று பார்த்தபோது நாகேஸ்வரராவ் வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேஸ்வரராவ் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Central Industrial Security Force ,Arakkonam ,Thakolam ,Nageswar Rao ,Visakhapatnam ,Andhra Pradesh ,Venkatalakshmi ,Nageswara Rao ,Ranipet district Arakkonam ,Takkolam ,
× RELATED நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எப் வீரர் பளார்!