×

ஐ.பி.எல். போட்டியில் தோற்றுக் கொண்டே இருக்கும் பெங்களூரு அணி போல்தான் பா.ஐ.க. ஜெயக்குமார் கடும் விமர்சனம்

சென்னை : “பிரதமர் மோடி 8 தடவ தமிழ்நாட்டுக்கு வந்தும், பாஜக ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,”அண்ணாமலை புள்ளிராஜா ஆகிவிட்டார். அண்ணாமலையின் பேச்சுகள் ஒருகட்சியின் மாநில தலைவர் பேச்சு போல இல்லை.2014-ல் வாங்கிய வாக்குகளை விட தற்போது பாஜக குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்கு மோடியை எட்டு முறை அழைத்து வந்தும் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியவில்லை. பா.ஜ.க.வின் கோட்டை எனப்படும் கன்னியாகுமரியிலேயே அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. ஐ.பி.எல். போட்டியில் தோற்றுக் கொண்டே இருக்கும் பெங்களூரு அணி போல்தான் பா.ஐ.க.எந்த காலத்திலும் பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியாது.

பா.ஜ.க. மட்டுமல்ல திமுக, அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது.
அதிமுக சென்னை அணி போன்றது வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும். பாஜகவின் மதவாத பிரிவினைவாத அரசியல் எடுபடவில்லை. அதிமுக பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.வுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. மக்கள் பிரச்சனைகளை பற்றி பாஜக எதுவும் பேசுவதில்லை. பாஜக கூட்டணி தொடர்பாக எஸ்.பி. வேலுமணி பேசியது அதிமுகவின் கருத்தல்ல. பாஜக உடன் கூட்டணி அமைத்திருந்தால் 35 இடங்களில் வென்றிருக்கலாம் என்பது வேலுமணியின் சொந்த கருத்து. எஸ்பி வேலுமணி பேசியது அனுமானத்தின் அடிப்படையில் ஆனது.பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இனி இல்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது,”இவ்வாறு பேசினார்.

The post ஐ.பி.எல். போட்டியில் தோற்றுக் கொண்டே இருக்கும் பெங்களூரு அணி போல்தான் பா.ஐ.க. ஜெயக்குமார் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : I. B. L. ,Bengaluru ,I. K. Jayakumar ,Chennai ,Modi ,Tamil Nadu ,BJP ,Minister ,Jayakumar ,Annamalai ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கு தொடர்பாக எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!!