சீனா: சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்க 100 மீட்டர் அளவு கொண்ட படகு உலகிலேயே மிக நீளமான படகு என்ற கின்னஸ் சாதனையை படைத்தது. சீனாவின் புகழ் வாய்ந்த கவிஞர் கியூ யுவானின் நினைவை போற்றும் வகையில் சீன கேலண்டரின் 5வது மாதத்தின் 5ம் நாளில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா நடத்தபடுகிறது. நடப்பு ஆண்டு டிராகன் படகு திருவிழா நாடு முழுவதும் கலைக்கட்டியுள்ளது. ஜியாங்சி மாகாணத்தில் உள்ள போயாங் ஏரியில் நடைபெற்ற படகு திருவிழாவில் 29 அணிகள் பங்கேற்றன.
200 மீட்டர், 500 மீட்டர் என பல பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் சீனா மட்டுமல்லாது பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் பல்வேறு அணிகள் களம் கண்டனர். பல்வேறு மாகாணங்களில் நடைபெற்ற டிராகன் படகு திருவிழாகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனிடையே ஹுனான் மாகாணத்தில் 100.97 மீட்டர் நீளம் கொண்ட படகு ஒன்று போட்டியில் பங்கேற்றது. 420 படகோட்டிகள் வரை அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த படகு உலகின் மிக நீளமான படகு என்ற கின்னஸ் சாதனையை படைத்தது.
The post சீனாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட டிராகன் படகு திருவிழா: போட்டியில் பங்கேற்க 100 மீட்டர் அளவு கொண்ட படகு உலகின் நீளமான படகிற்கான கின்னஸ் சாதனை appeared first on Dinakaran.