×

தமிழ்நாட்டில் அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 53.48 லட்சம் பேர் அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 31ம் தேதி வரை மாவட்டம் மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 53,48,663 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 24,63,081 ஆண்களும், பெண்கள் 28,85,301 பேரும், 281 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 45 முதல் 60 வயது வரை 2,47,811 பேர் உள்ளதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7,810 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,50,018 பேர் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து காத்திருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அரசு பணிக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,and Training Department ,Chennai ,Government of Tamil Nadu's Employment and Training Department ,Employment ,Training Department ,
× RELATED தொழிற்பயிற்சி நிலையங்களில்...