×

நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது,

நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது

நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு கூட்டாட்சிக்கு, சமூக நீதிக்கு எதிரானது.

நீட் ரத்தாகும் நாள் வெகு தொலைவில் இல்லை

நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! என்றும் அவர் தெரிவித்தார்.

நீட் குளறுபடி, எதிர்ப்பு நிலையை உறுதிசெய்துள்ளது

நடந்து முடிந்த நீட் தேர்வு பற்றிய புகார்கள் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. வினாத்தாள் கசிவு, ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் முழு மதிப்பெண். கருணை மதிப்பெண் குளறுபடி. வழங்கவே முடியாத மதிப்பெண்களை பெற்றது கணக்கியல் ரீதியாக சாத்தியமற்றவை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு குளறுபடி முதலமைச்சர் வலியுறுத்தல்

மத்தியப்படுத்தி தகுதித் தேர்வை நடத்தும் ஒன்றிய அரசின் குளறுபடிகளை நீட் கருணை மதிப்பெண் அம்பலப்படுத்தியுள்ளது. மாணவர் சேர்க்கையில் மாநிலத்துக்கே அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை நீட் குளறுபடிகள் உறுதி செய்கின்றன. தொழிற்படிப்பு சேர்க்கை மாநிலப் பாடத்திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

The post நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,NEET ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு மோசடிக்கு விரைவில் முடிவு...