×

ரோஜா இதழ்களால் வரவேற்பு அளித்த சிரஞ்சீவி குடும்பம்: சகோதரர் சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்ற பவன் கல்யாண்

ஐதராபாத்: ஆந்திராவில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு அவரது சகோதரரும், நடிகருமான சிரஞ்சீவி பிரமாண்டமான வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தார். ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 சட்டமன்ற தொகுதிகளையும், 2 சட்டமன்ற தொகுதிகளையும், கைப்பற்றியது. இதை அடுத்து டெல்லி சென்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பவன் கல்யாண் தனது குடும்பத்தினரோடு மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனை தொடர்ந்து டெல்லியிலிருந்து திரும்பியதும் தன்னுடைய சகோதரருமான நடிகர் சிரஞ்சீவியின் ஆசீர்வாதம் பெறுவதற்காக ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பவன் கல்யாண் சென்றார். அப்போது அவருக்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண், வருண் தேஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரோஜா இதழ்களால் பிரம்மாண்ட வரவேற்பு அளித்து கேக் வெட்டி கொண்டாடினர். இதை அடித்து தனது அம்மா, சகோதரர் உள்ளிட்டோரின் கால்களில் விழுந்து பவன் கல்யாண் ஆசீர்வாதம் பெற்றார். வெற்றி களிப்பில் இருந்த அவருக்கு சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார்.

 

The post ரோஜா இதழ்களால் வரவேற்பு அளித்த சிரஞ்சீவி குடும்பம்: சகோதரர் சிரஞ்சீவி காலில் விழுந்து வாழ்த்து பெற்ற பவன் கல்யாண் appeared first on Dinakaran.

Tags : Chiranjeevi ,Bhavan Kalyan ,Hyderabad ,Janasena Party ,Andhra Pradesh ,
× RELATED தெலங்கானா ஆந்திராவுக்கு சிம்பு நிதியுதவி