×

மீண்டும் நாடாளுமன்றதிற்குள் நுழைந்த மர்ம நபர்களால் சர்ச்சை.. போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேர் கைது..!!

டெல்லி: நாடாளுமன்றத்திற்குள் போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி செவ்வாய்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் உள்ள 3ம் நுழைவு வாயில் முன்பு ஏராளமானவர்கள் உள்ளே செல்வதற்காக காத்து கொண்டிருந்தபோது நிகழ்ந்துள்ளது. அப்போது 3 பேர் தங்களுடைய ஆதார் கார்டுகளை காண்பித்து உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர். சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் யார் உள்ளே செல்ல போகிறார்களோ அவர்களை பரிசோதித்த பின்னர் அனுமதிப்பார்கள்.

அப்படி மூவரையும் பரிசோதிக்கும் போது ஆதார் கார்டுகளை காண்பித்துள்ளனர். அத்தகைய ஆதார் கார்டுகளை காண்பித்ததில் சி.ஐ.எஸ்.எப் வீரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரணை செய்த போது ஆதார் கார்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களின் பெயர் காசீம், மோனிஸ், சோயப் என்பது தெரியவந்தது. புதிய நாடாளுமன்றத்தில் தற்போது சில கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது.

எம்.பி.க்களுக்கான ஓய்வு அறை கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் இவர்களை பணியமர்த்தியதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இதன் பின்னால் வேறு ஏதேனும் சதிவேலை இருக்கின்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல்துறையில் சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது பல்வேறு தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம், குற்றசதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெற்று கொண்டிருந்த போது மக்களவையின் பார்வையாளர் மாடத்திலிருந்து 3 பேர் குதித்து வண்ண புகை குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் பெரிய பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பை டெல்லி காவல் துறையிடமிருந்து சி.ஐ.எஸ்.எப் பெற்று கொண்டது. இந்த நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் மிக பெரிய மீண்டும் ஒரு பாதுகாப்பு குளறுபடி சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.

The post மீண்டும் நாடாளுமன்றதிற்குள் நுழைந்த மர்ம நபர்களால் சர்ச்சை.. போலி ஆதார் கார்டுகளை காண்பித்து நுழைய முயன்ற 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Parliament ,Delhi ,
× RELATED 24ம் தேதி நாடாளுமன்ற முதல் கூட்டத்...