×

நீட் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பிரியங்கா காந்தி கேள்வி!

டெல்லி: நீட் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை அரசு புறக்கணிப்பது ஏன் என பிரியங்கா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருப்பது கேள்விகளை எழுப்புகிறது. நீட் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். நடைபெற்று முடிந்த நீட் தேர்வு குறித்து பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்று கூறியுள்ளார்.

 

The post நீட் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பிரியங்கா காந்தி கேள்வி! appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Delhi ,Congress ,General Secretary ,NEET ,
× RELATED நீட் போலி விடைத்தாள் மாணவி வீடியோ...