×

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற சில குறிப்பிட்ட இடங்களில் மீதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய தெற்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், கேரள கடல் பகுதிகள், லட்சத்தீவு கடல் பகுதிகளில் வரும் 10ஆம் தேதி வரையில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சொல்ல வேண்டாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Survey Center ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Krishnagiri ,Tirupathur ,Vellore ,Ranipetta ,Tiruvannamalai ,Viluppuram ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21...