சிங்கம்புணரி, ஜூன் 7: சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோயில் புகழ் பெற்றதாகும். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று மதியம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் சித்தருக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள் பழச்சாறுகள் வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. வண்ண மலர் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் ஒரு மணிக்கு கோயிலின் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
The post சித்தர் கோயிலில் அமாவாசை வழிபாடு appeared first on Dinakaran.