×

பெரம்பலூர் நகராட்சியில் வண்டிப்பேட்டை வரிவசூலை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், ஜூன்7: பெரம்பலூர் நகராட்சியில் வண்டிப்பேட்டை வரிவசூல் நடத்தி வருவதைக் கைவிட கோரி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டுப் பகுதியில் நேற்று காலை, பெரம் பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் விற் பனையாளர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக, பெரம்பலூர் நகராட்சியில் டெண்டர் விடாமலேயே வண்டிப்பேட்டை வரிவசூல் நடத்தி வருவதைக் கைவிட வேண்டும்,

வெண்டர் கமிட் டியை உடனே கூட்ட வேண் டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத் தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ரெங்கராஜ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியா பாரிகள் மற்றும் விற்பனை யாளர்கள் தொழிலாளர்கள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் சிஐடியு சங்கத் தைச்சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் நகராட்சியில் வண்டிப்பேட்டை வரிவசூலை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Perambalur Municipality ,Perambalur ,
× RELATED நெகிழி ஒழிப்பு, துணிப்பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு