×

பொய்யாநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டி யாகம்

 

அரியலூர், ஜூன் 7: அரியலூர் அடுத்த பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை முன்னிட்டு அக்கோயில் சன்னதியிலுள்ள ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி வைகாசி மாத அமாவாசயை முன்னிட்டு நேற்று நடைபெற்ற மகா சண்டியாகத்தில் கலந்து கொண்ட பகத்தர்கள், தங்கள் கொண்டு வந்துள்ள புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்துப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post பொய்யாநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டி யாகம் appeared first on Dinakaran.

Tags : Chili ,Chandi ,Yagam ,Boiyanallur Chamundeeswari Temple ,Ariyalur ,Chilli sandiyag ,Chamundeeswari temple ,Nallur ,moon ,Prathiyangara Devi ,Chili Chandi ,
× RELATED பலதானிய அடை