காரைக்கால், ஜூன் 7: காரைக்கால் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் முறையில் உளுந்து மற்றும் டிராகன் ஃப்ரூட் சாகுபடி செய்த விவசாயிகளின் வயல்களை மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொழில்ப வல்லுநர்கள் மற்றும் வேளாண் துறையை சேர்ந்த வேளாண் அலுவலர் பார்வையிட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் பிள்ளைத்தெரு வாசல் பகுதியை சேர்ந்த விவசாயி ஆரோக்கியதாஸ் 8 ஏக்கர் வயலில் வம்பன் 11 என்ற உளுந்து ரகம் சாகுபடி செய்துள்ளார். இதேபோல் செருமாவிலங்கையை சேர்ந்த விவசாயி மாலதி தோட்டத்தில் டிராகன் பழம் இயற்கை விவசாயம் முறையில் சாகுபடி செய்துள்ளனர். இந்த இரு வயல்களையும் நேரடியாக வேளாண் அறிவு நிலையத்தில் வல்லுநர்கள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.
The post காரைக்கால் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி வயல்களில் வேளாண் வல்லுநர்கள் ஆய்வு appeared first on Dinakaran.