×

கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை

 

கரூர், ஜூன் 7: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் இருந்து புதுத்தெரு, சர்ச் கார்னர் போன்ற பகுதிகளுக்கான சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. புதுத்தெருவின் வழியாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் பயணித்து வருவதாலும், முறையற்ற நிலையில வாகனங்கள் குறுக்கே செல்வதாலும் ஒரு சில சமயங்களில் இந்த பகுதியில் விபத்துக்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

எனவே, புதுத்தெரு பகுதியில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் அதனை முறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிச் சாலையை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Tags : Karur Pudutheru ,Karur ,Karur Corporation ,Karur Kamaraj Market ,Pudutheru ,Church Corner ,Dinakaran ,
× RELATED சாலைகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்ல கூடாது