×

வேலாயுதம்பாளையம் அருகே ஆற்று சுவற்றில் படுத்திருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி

 

வேலாயுதம்பாளையம், ஜூன் 7: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வள்ளாகுளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (54). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அந்தப் பகுதி உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு இரவு நொய்யல் ஆற்று பாலத்தின் சுவற்றின் மேல் ஏறி படுத்திருந்தார். அப்போது நிலை தடுமாறி பள்ளத்தில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஈஸ்வரமூர்த்தியின் மகன் முருகேசன் (29) என்பவர் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புwகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

The post வேலாயுதம்பாளையம் அருகே ஆற்று சுவற்றில் படுத்திருந்த தொழிலாளி தவறி விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Iswaramoorthy ,Vallagulathuppalayam ,Noyal ,Karur district ,Tasmac ,Noyyal river bridge ,
× RELATED ஏற்றுமதி இலக்கை அடைந்திட ஒருங்கிணைந்த சிறிய ஜவுளி பூங்கா