×

எஸ்.டி வளர்ச்சி கழகத்தில் ரூ.88 கோடி முறைகேடு கர்நாடக அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி கழகத்தின் கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர் சந்திரசேகரன் (48). இவர் கடந்த மே 26ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த 6 பக்க கடிததத்தில், வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழகத்தின் பல்வேறு கணக்குகளில் மானியமாக ரூ.187.3 கோடி இருந்தது. அதை கொள்ளையடிக்க உதவுமாறு கழகத்தின் நிர்வாக இயக்குநர் பத்மநாபா மற்றும் தலைமை கணக்காளர் பரசுராம் ஆகியோர் என்னை கட்டாயப்படுத்தினார்கள்.

அவர்கள் கூறியபடி, ஓராண்டில் ரூ.88.62 கோடி வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றினேன். எஞ்சிய தொகையையும் வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்ற தன்னை கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அமைச்சர் நாகேந்திரா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சித்தராமையாவுக்கு நேற்று அனுப்பி வைத்தார்.

The post எஸ்.டி வளர்ச்சி கழகத்தில் ரூ.88 கோடி முறைகேடு கர்நாடக அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Minister ,Nagendra ,ST Development Corporation ,BENGALURU ,Chandrasekaran ,Karnataka Government ,Valmiki Tribal Development Corporation ,
× RELATED போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார்...