×

மக்கள் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்

லக்னோ: பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. உத்தரபிரதேச வளர்ச்சி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை யோகி ஆதித்ய நாத் எடுத்து வருகிறார். அதன்ஒரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஜனதா தர்ஷன் எனப்படும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி காளிதாஸ் மார்க்கில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் யோகி ஆதித்ய நாத், “ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் அரசு அதிகாரிகள் கலந்து பேசி அவர்களின் குறைகளை கேட்டு, அதனை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்களின் பிரச்னைகளை தீர்ப்பதுதான் அரசின் முன்னுரிமை. எனவே பொதுமக்கள் தொடர்பான பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், “எந்த பணியையும் புறக்கணிப்பதையும், அதில் அலட்சியம் காட்டுவதையும் சகித்துக் கொள்ள முடியாது. பிரச்னைகளுக்கு தீர்வு காணாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

The post மக்கள் பிரச்னைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : UP ,Chief Minister ,Yogi Adityanath ,Lucknow ,Uttar Pradesh ,Yogi Aditya Nath ,BJP ,Uttar ,Pradesh ,
× RELATED அதீத நம்பிக்கையே உபியில் பாஜவின்...