×

முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட கலெக்டர் திருவள்ளூர், திருத்தணியில் உள்ள கிளை சிறைச்சாலைகளில் கூட்டாய்வு : உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் நடவடிக்கை

திருவள்ளூர் ஜூன் 7: உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்போரில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் திருவள்ளூர், திருத்தணியில் உள்ள சிறைச்சாலைகளில் கூட்டாய்வு மேற்கொண்டனர். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளை சிறைச்சாலைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா, மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.நிவாச பெருமாள், மோட்டார் வாகன சிறப்பு நீதிபதி சி.சரஸ்வதி, தலைமை குற்றவியல் நடுவர் கே.மோகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி.தீனதயாளன் ஆகியோர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் சிறையில் உள்ள கைதிகளுக்கு அளித்துவரும் உணவு தரமாக உள்ளதா என்றும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளதா என்றும் சிறை கைதிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மருத்துவர்கள் வருகைப் பதிவேடு, கைதி ஒப்படைப்பு பதிவேடு, காப்பு புத்தகம், பாரா சிறை பதிவேடு, ஆயுத அறை, சமையலறை, சட்ட சேவை மையம் கைதிகளின் நேர்காணல் அறை போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும். சேதமடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது ஆய்வு மேற்கொண்ட அறிக்கை விபரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரிக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, துணை கண்காணிப்பாளர்கள், சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறையினர் உட்பட பலர் உடனிருந்தனர். பட விளக்கம் – திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளை சிறைச்சாலைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா, மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், போலீஸ் எஸ்பி ரா.நிவாச பெருமாள், மோட்டார் வாகன சிறப்பு நீதிபதி சி.சரஸ்வதி, தலைமை குற்றவியல் நடுவர் கே.மோகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பி.தீனதயாளன் ஆகியோர் கூட்டாய்வு மேற்கொண்டனர்.

The post முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட கலெக்டர் திருவள்ளூர், திருத்தணியில் உள்ள கிளை சிறைச்சாலைகளில் கூட்டாய்வு : உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Principal District Sessions ,District Collector ,Thiruvallur ,Thiruthani Branch Jails Co ,Supreme Court ,Collector ,Thiruvallur, ,Tiruthani ,Tiruvallur ,District Sessions ,Dinakaran ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...