×

சம்பள பணம் மோசடி; ஒப்பந்ததாரர் மீது வழக்கு

மாதவரம், ஜூன் 7:புளியந்தோப்பு அன்சாரி 5வது தெருவில் வசித்து வருபவர் அனரூல் அக். இவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து கூலி ஆட்களை வரவழைத்து, ஒப்பந்த முறையில் சென்னையில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 6ம் தேதி முதல் கொளப்பாக்கம் ஆர்.ஆர்.கோகுல கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ராஜ்குமார் (78) என்பவரிடம் கட்டிட வேலைக்காக தனது ஊழியர்களை அனரூல் அனுப்பி வைத்துள்ளார். இதற்கு, ₹2.28 லட்சத்தை வேலையாட்களுக்கு ராஜ்குமார் கொடுக்க வேண்டி இருந்தது. வேலையை முடித்தவுடன் பணம் தருகிறேன் என்று கூறிய அவர், அதன் பின்பு பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அனரூல் அக் பலமுறை பணம் கேட்டும் ராஜ்குமார் பணம் தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அனரூல் அக், இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சம்பள பணம் மோசடி; ஒப்பந்ததாரர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Anarul Ak ,Pulianthoppu Ansari 5th Street ,Bihar ,Chennai ,Kolapakkam ,Dinakaran ,
× RELATED மாதவரம் பால் பண்ணையில் இருந்து மொத்த...