×

மாமல்லபுரத்தில் சுனாமியின்போது கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோயில் சீரமைப்பு பணி மும்முரம்

மாமல்லபுரம், ஜூன் 7: மாமல்லபுரத்தில் சுனாமியின்போது கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோயிலை சீரமைத்து பாதுகாக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலை தமிழ்நாட்டை தாக்கிய போது, மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஊராட்சி சாலவான்குப்பம் பகுதியில் கடல் நீர் நீண்ட தூரம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே வந்து மணற்பரப்பை அரித்துக் கொண்டு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி சென்றது. அப்போது, புலிக்குகைக்கு அருகே கோயில் கோபுரம் ஒன்று மணலில் புதைந்து காணப்பட்டது.

இதையடுத்து, தொல்லியல் துறையினர் அகழ்வராய்ச்சி செய்தபோது அது முருகன் கோயில் என தெரிய வந்தது. அப்போது, முதல் புலிக்குகையை சுற்றிப் பார்க்க வரும் பயணிகள், முருகன் கோயிலையும் சுற்றிப் பார்க்க ஆர்வம் காட்டினர். ஆனால், அங்கு செல்ல சரியான பாதை இல்லாததால் பயணிகள் சிரமப்பட்டனர். இதையறிந்த தொல்லியல் துறை நிர்வாகம் புலிக்குகைக்கு வரும் பயணிகள் அங்கிருந்து எளிதில் முருகன் கோயிலை சுற்றிப் பார்க்கும் வகையில் கடந்தாண்டு நடைபாதை அமைத்தது. இந்நிலையில், சுனாமியின்போது சாலவான்குப்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகளை படிப்படியாக சீரமைத்து பாதுகாக்கும் பணியில் தொல்லியல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post மாமல்லபுரத்தில் சுனாமியின்போது கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோயில் சீரமைப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Murugan temple ,Tsunami ,Tamil Nadu ,Chalavankuppam ,Pattipulam Panchayat ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...