×

சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம் காதலனிடம் போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஜூன் 7: குடியாத்தம் அருகே நேற்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து சிறுமியின் காதலனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவியும், வேப்பனேரி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான அஜித்(22) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் மாணவிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனையறிந்த மாணவி மற்றும் கட்டிட தொழிலாளி அஜித் குமார் ஆகிய இருவரும் நேற்று வீட்டில் இருந்து வெளியேறினர்.

மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ள குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் ேநற்று காலை அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதுகுறித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன்படி குடியாத்தம் மகளிர் பிரிவு ஊர் நல அலுவலர் தவமணி குடியாத்தம் அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி அப்பகுதிக்கு விரைந்து சென்று சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினார். பின்னர் சிறுமியை மீட்டு வேலூர் காப்பகத்தில் ஒப்படைத்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து கட்டிட தொழிலாளி அஜித்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம் காதலனிடம் போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Kudiattam ,Vellore district ,
× RELATED காணாமல் போன குளத்தை தேடி...