×

நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் சிலைகள் அகற்றம்: பழைய கட்டிட புல்வெளிக்கு இடமாற்றம்

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி, அம்பேத்கர் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த சிலைகள் பழையகட்டிட புல்வெளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 18வது மக்களவை விரைவில் கூட உள்ளது. அப்போது புதிய எம்பிக்கள் பதவி ஏற்பார்கள். இதையடுத்து நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து இருந்த மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோர் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.

அவை அனைத்தும் பழைய நாடாளுமன்ற கட்டிடம் அருகே உள்ள புல்வெளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா மற்றும் மகாராணா பிரதாப் சிலைகள் உட்பட அனைத்து சிலைகளும் இப்போது பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கும் நாடாளுமன்ற நூலகத்திற்கும் இடையே உள்ள புல்வெளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. 18வது மக்களவை கூடும் முன்பே இந்த இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது கொடுமையானது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் சிலைகள் அகற்றம்: பழைய கட்டிட புல்வெளிக்கு இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Ambedkar ,New Delhi ,MPCs ,Parliament ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின்...