×

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு: ராகுல் காந்தி குற்றசாட்டு

டெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பங்குச்சந்தையில் நடந்துள்ள முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் தெரிவித்துள்ளதாவது; “பங்குச்சந்தையில் லாபம் ஈட்ட தேர்தல் கருத்துக் கணிப்பில் முறைகேடு நடந்துள்ளது. மே 30, 31 தேதிகளில் பல ஆயிரம் கோடிக்கு பங்குகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளது. ரூ.1000 கோடிக்கு பங்குகளை வாங்கி குவிக்கப்பட்டுள்ளது. பிரதமரும், உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட நேரத்தில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியது ஏன்? இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்”

வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களுக்கு முன்பே கருத்துக்கணிப்பு மூலம் பாஜக வெற்றியைப் பூதாகரமாகக் காட்டியது ஏன்? தேர்தல் முடிவுகள் வெளியான அன்று பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் லஞ்சமாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல்களின்போது முதன்முறையாக, ​பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பங்குச் சந்தைகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

* பங்குச்சந்தை ஏற்றம் காணப் போகிறது என்று பிரதமர் பல முறை கூறினார்.

* ஜூன் 4ம் தேதி பங்குச்சந்தை உயரும், மக்கள் பங்குகளை வாங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.

* ஊடகங்கள் போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றன, ஆனால் பாஜகவுக்கு 200-220 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.

* ஜூன் 3 அன்று பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றத்தைச் சந்தித்தது, ஆனால் அடுத்த நாளே நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது” என ராகுல் காந்தி தெரிவித்தார்.

The post தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திட்டமிட்டு முறைகேடு: ராகுல் காந்தி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,DELHI ,Parliamentary Assembly ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்களுக்கு உரிமைகளும்...