×

இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை; ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும் எப்படி கொக்கரித்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்டனம்

சென்னை: இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்தபோது அதிமுக-பாஜக கூட்டணி நன்றாகத்தான் இருந்தது; அதிமுக-பாஜக கூட்டணி பிரிந்ததே அண்ணாமலை அதிகம் பேசியதால்தான் என எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார்.

இதையடுத்து எஸ்.பி.வேலுமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமி- வேலுமணிக்கு இடையே உட்கட்சி பிரச்னை இருப்பது போல் தெரிகிறது. தனித்து ஒரு இடம் கூட வாங்க முடியாத அதிமுக, எப்படி பாஜகவுடன் கூட்டணி வைத்து 35 இடம் வாங்க முடியும். பாஜக பெற்ற வாக்கு எண்ணிக்கை குறித்து வேலுமணி தவறான தகவலை தந்துள்ளார். வேலுமணி தன்னுடைய அரசியல் அறிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கோயம்புத்தூர் மக்கள் அதிமுகவை முற்றிலும் நிராகரித்து விட்டனர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. பாஜக மாநில தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. பாஜக மாநில தலைவராக வேறு ஒருவரை கொண்டு வந்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியும். அப்பாவி ஆட்டை வெட்ட வேண்டாம். கோபம் இருந்தால் என் மீது கை வையுங்கள். நான் கோவையில்தான் இருக்கப் போகிறேன்,”இவ்வாறு பேசினார்.

இதற்கு பதில் தெரிவிக்கும் வகையில், இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை என அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் கூறியதாவது, இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை. தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அதிமுகவை பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக்கொள்ளட்டும். ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அஇஅதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இபிஎஸ், எஸ்.பி.வேலுமணி பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை; ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும் எப்படி கொக்கரித்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,EPS ,SB ,Velumani ,AIADMK ,CHENNAI ,BJP ,Tamilisai ,L. Murugan ,AIADMK Information Technology Unit ,Dinakaran ,
× RELATED செல்வபெருந்தகையை விமர்சித்த அண்ணாமலை...