×

டி.20 உலக கோப்பை தொடர்: 39 ரன் வித்தியாசத்தில் ஓமனை வென்ற ஆஸ்திரேலியா

பிரிட்ஜ்டவுன்: ஐசிசி டி.20 உலககோப்பை தொடரில் பிரிட்ஜ்டவுனில் இன்று காலை நடந்த 10வது லீக் போட்டியில் பி பிரிவில் அமெரிக்கா -ஓமன் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஓமன் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில், டிராவிஸ் ஹெட் 12, கேப்டன் மிட்செல் மார்ஷ் 14 ரன் எடுக்க, மேக்ஸ்வெல் கோல்டன் டக்அவுட் ஆனார். டேவிட் வார்னர் 56 ரன் (51 பந்து) அடித்தார். 20 ஓவரில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டம் இழக்காமல் 36 பந்தில், 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 67 ரன் விளாசினார்.

பின்னர் களம் இறங்கிய ஓமன் அணியில், அயன் கான் 36, மெஹ்ரான் கான் 27 ரன் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 20 ஓவரில் ஓமன் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களே எடுத்தது. இதனால் 39 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டோனிஸ் 3, ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட் எடுத்தனர். ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

உகான்டா முதல் வெற்றி: டி.20 உலக கோப்பை தொடரில் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கி நடந்த 9வது லீக் போட்டியில் சி பிரிவில் உகான்டா-பப்புவா நியூகினியா மோதின. டாஸ் வென்ற உகான்டா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த கியூகினியா 19.1 ஓவரில் 77 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய உகான்டா 18.2 ஓவரில் 7 விக்கெட் இழந்து 78 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. முதல் போட்டியில் ஆப்கனிடம் தோற்ற அந்த அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

The post டி.20 உலக கோப்பை தொடர்: 39 ரன் வித்தியாசத்தில் ஓமனை வென்ற ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Tags : T20 World Cup Series ,Australia ,Oman ,Bridgetown ,ICC T20 World Cup ,USA ,Travis ,Dinakaran ,
× RELATED ஜஸ்பிரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான...