×

மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

கோவை: மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டது. இதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி தாலுகா, மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (31). இவர், தனது மனைவி குழந்தையுடன் திருப்பூரில் தங்கி அங்குள்ள கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சுரேஷ்குமார் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சுரேஷ்குமாரின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க சம்மதித்தனர்.

இதையடுத்து உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு, கல்லீரல் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள மோகன் குமாரலிங்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இந்த உறுப்புதானம் காரணமாக 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்த சுரேஷ்குமாரின் உடலுக்கு மருத்துவமனையின் டீன் நிர்மலா மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

The post மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Suresh Kumar ,Mantoppu village, ,Gariyapatti taluk, Virudhunagar district ,Tirupur ,
× RELATED கோவையில் பட்டா மாறுதல் செய்ய மோசடி