×

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும், சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு..!!

டெல்லி: சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும், சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு செய்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. நாளை மறுநாள் பிரதமர் மோடி 3ம் முறையாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி பதவி ஏற்கும் போது புதிய அமைச்சர்களும் அவருடன் பதவி ஏற்பார்கள்.

பாஜக இந்த முறை தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது. கூட்டணி கட்சிகளின் உதவியோடு தான் பாஜக ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் உள்ளது. அப்படி கூட்டணி என்று வருகின்றன போது சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் முக்கிய பங்கு வகித்துள்ள நிலையில் இருவருக்கும் 28 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் தங்களுக்கு சில முக்கிய துறைகளும் அதே போல முக்கிய அமைச்சர்களும் வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இவர்கள் தவிர மற்ற சில கூட்டணி கட்சிகளும் சில அமைச்சர் பதவிகளும், முக்கிய இலாக்காகளும் வேண்டும் என்று பாஜக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் யாராக இருந்தாலும் சில முக்கியமான துறைகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது தங்களுக்கென வைத்திருக்க வேண்டும் என்பதில் பாஜக மிக தீவிரமாக உள்ளது. அந்த வகையில், உள்துறை, நிதித்துறை, ரயில்வே துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியுறவு, சட்டம், தகவல் தொடர்பு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளையும் தன்வசமே வைக்க பாஜக முடிவு செய்துள்ளது. வேளாண்துறையை, குமாரசாமி வலியுறுத்தும் நிலையில், அவர் கட்சிக்கு வேளாண்துறை அல்லது கூட்டுறவுத்துறை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு முக்கிய துறையுடன் கூடிய கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்குவதும் உறுதியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் உட்பட 10 அமைச்சர் பொறுப்புகளை வழங்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் எவ்வளவு வற்புறுத்தி கேட்டாலும், சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Nitish Kumar ,BJP ,Delhi ,
× RELATED சில முக்கிய துறைகளை தன்வசமே வைத்திருக்க பாஜக முடிவு!