×

கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியில் அதிகாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மீண்டும் சிறுத்தை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகர் பகுதியில் உலா வரும் சிறுத்தை குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்லவது வாடிக்கையாக இருந்து வருகிறது.இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியில் தாவிது பாக்கியராஜ் என்பவரது குடியிருப்பில் ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்குள் நுழைந்து வளர்ப்பு நாயை தூக்கி சென்றது.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை உலா வந்தது. இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. எனவே, வனத்துறையினர் கன்னேரிமுக்கு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் இடத்தை உறுதி செய்து அப்பகுதியில், கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Kothagiri ,Kannerimku ,Nilgiri district ,
× RELATED கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை மகசூல் அதிகரிப்பு