×

பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது பகுஜன் சமாஜ் கட்சி!

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் 16 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு பகுஜன் சமாஜ் கட்சி காரணமாக அமைந்தது. பாஜக வென்ற 14 தொகுதிகள், கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற 2 தொகுதியில் பெற்ற வித்தியாசத்தை விட பிஎஸ்பி வாக்குகள் அதிகம். பகுஜன் சமாஜ் கட்சி வாக்குகளை பிரிக்காமல் இருந்திருந்தால் உத்தரப்பிரதேசத்தில் மேலும் 16 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி தோற்றிருக்கும். அக்பர்பூரில் பகுஜன் சமாஜ் 73,140 வாக்குகள் பெற்றதால் பா.ஜ.க.வை விட 44,345 வாக்குகள் குறைவாக பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் தோல்வி. 15,647 வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க.விடம் சமாஜ்வாதி கட்சி தோற்ற அலிகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி 1,23,929 வாக்குகள் பெற்றுள்ளது.

 

The post பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது பகுஜன் சமாஜ் கட்சி! appeared first on Dinakaran.

Tags : BJP Bahujan Samaj Party ,Delhi ,BJP ,Uttar Pradesh ,Bahujan Samaj Party ,BSP ,Bahujan… ,Dinakaran ,
× RELATED மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல்...