×

திருப்பத்தூரில் பெய்து வரும் மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்


திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பெய்து வரும் மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போடுகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை தென்திசை அடிவாரத்தில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளதால் தமிழகமெங்கும் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நீர்வீழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாகும். இந்நிலையில் சில நாட்களாக பெய்த கோடை மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது நீர்வரத்து தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி புதுப்பொலிவுடன் சிறுவர்களை கவறும் வண்ணம் பூங்கா, வனவிலங்குகளின் ஓவியங்கள், உடைமாற்றும் அறை, மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க கூடாரம் உள்ளிட்டவை புதுப்பொலிவுடன் அமைந்துள்ளது. இந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குடும்பத்துடன் குளித்து விட்டுச் செல்கின்றனர்.
தற்போது கோடை விடுமுறை முடிந்து வருகின்ற 10ம் தேதி பள்ளி தொடங்க உள்ளதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து உற்சாகமாக வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பத்தூரில் பெய்து வரும் மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் appeared first on Dinakaran.

Tags : Tiruppathur ,Jalakambarai Falls ,Jalakambarai ,Elagiri Hills ,Tirupattur District ,Murugan ,Tirupathur ,
× RELATED இன்று மின் குறை தீர் கூட்டம்