×

ஷாருக்கான்- நயன்தாரா பாடல் வீடியோ லீக்: அட்லி ஷாக்

மும்பை: ஜவான் படத்துக்கான பாடல் காட்சியில் ஷாருக்கான், நயன்தாரா நடித்தது வீடியோவாக லீக் ஆகியுள்ளது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் இந்தி படம் ‘ஜவான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒன்றரை வருடமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம், விரைவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவின் பாடல் காட்சியின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. சொகுசு படகில் ஷாருக்கானும் நயன்தாராவும் ஆடிப்பாடினர்.

இந்த பாடல் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. ஓரிரு நிமிடம் ஓடும் இந்த காட்சியில் ஷாருக்கான், நயன்தாரா டூயட் பாடுகிறார்கள். இதையடுத்து இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகிவிட்டது. இதை பார்த்து அட்லி மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி வீடியோ சில தினங்களுக்கு முன் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது. படத்தின் தயாரிப்பாளரான ஷாருக்கான் இதனால் அப்செட்டில் இருக்கிறாராம்.

The post ஷாருக்கான்- நயன்தாரா பாடல் வீடியோ லீக்: அட்லி ஷாக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Adli Shaq ,Mumbai ,Shahrukkan ,Nayantara ,Shakharukan ,Dipika Padukone ,Vijay Sedhupathi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...