×

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு: அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் துவங்கியது. ஜூன் 4 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியானது. இதற்கிடையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 16-ம் தேதி தேர்தல் தேதி அறிவித்தது முதல் இன்று வரை தேர்தல் விதிகள் தமிழகத்தில் அமலில் இருக்கிறது.

இந்த தேர்தல் விதிகள் எப்போது நிறைவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில், இதுகுறித்து நேற்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அளித்த பேட்டியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது உட்பட பல்வேறு புகார்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்தன. தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை அமைதியாக முடிந்தது. தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் முடிவுகளை குடியரசு தலைவரிடம் வழங்குவார். அதன்பின், மத்தியில் புதிய ஆட்சி அமைக்க நடவடிக்கை துவங்கும்.

தேர்தல் நடத்தை விதிகள், நாளை (ஜூன் 6) வரை அமலில் இருக்கும் என சத்யபிரதா சாஹு தெரிவித்தார். அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிவரையில் தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் திரும்பப் பெறப்படுகின்றன. இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட உள்ளன; இதையடுத்து மகளிர் உரிமைத்தொகை, புதிய ரேஷன் அட்டைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

The post தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு: அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...