×

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு..!!

டெல்லி: குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணி அளவில் சந்திக்க உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் கட்சி வாரியாக எந்த கட்சிகளுக்கு எவ்வளவு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், எவ்வளவு எண்ணிக்கை உள்ளது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை குடியரசு தலைவரிடம் தேர்தல் ஆணையத்தினர் வழங்க உள்ளனர்.

மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை தொடர்ந்து 18வது மக்களவை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை குடியரசு தலைவருக்கு வழங்க வேண்டும். பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை குடியரசு தலைவர் தொடங்குவார். அதன் அடிப்படை விதிமுறைகளின்படி இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளபட உள்ளது.

தேர்தல் ஆணையம் பட்டியலை வழங்கிய பிறகு குடியரசு தலைவர் 18வது மக்களவை பணிகளை தொடங்குவதோடு எந்த கட்சிக்கு அதிக உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கிறதோ அந்த கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அதற்கு முன்னதாக சம்மந்தப்பட்ட கட்சியும் குடியரசு தலைவரை சந்தித்து உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்று ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும். இரண்டு பட்டியலையும் குடியரசு தலைவர் சரிபார்த்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று முடிவு செய்யும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுப்பார். இத்தகைய நடைமுறை இன்று நடைபெற உள்ளது.

 

The post குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு..!! appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,President ,Draupati Murmuy ,Delhi ,Election Commission ,Chief Election Commissioner of ,India ,Thraupati Murmuy ,Lok ,Sabha ,The Election Commission of India ,Draupati Murmu ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக...