×

செல்போன் கேட்ட மகனை மிரட்டுவதாக எண்ணி தூக்கு போட்டு கொண்ட தாய் கழுத்து இறுகி பலி

திருச்சி, ஜூன் 6: திருச்சி மேல கண்கண்டார் கோட்டை சஞ்சீவி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி பழனியம்மாள்(39), இவர்கள் இருவரும் பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லுாரி பயிலும் இவர்களது மகன் லெனின் தனது தாயிடம் செல்போன் கேட்டு தொந்தரவு செய்துள்ளார், இதனால் மனமுடைந்த தாய் மகன் கண் முன்னே சேலையால் மின்விசிறியில் துாக்கு மாட்டி கொள்வது போல நடித்து மகனை மிரட்ட நினைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பழனியம்மாள் சேலை கழுத்தை இறுக்கியது, இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பழனியம்மாளை மீட்டு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post செல்போன் கேட்ட மகனை மிரட்டுவதாக எண்ணி தூக்கு போட்டு கொண்ட தாய் கழுத்து இறுகி பலி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Murugesan ,Palaniammal ,Sanjeevi Amman Kovil Street, Mela Kankandar Fort ,Lenin ,
× RELATED தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு