×

நீலிமலை பாதை இன்று திறப்பு

திருவனந்தபுரம் ; சபரிமலையில் கொரோனா நிபந்தனைகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து பம்பையில் நேற்று முதல் பக்தர்கள் குளிக்கவும், சன்னிதானத்தில் இரவில் தங்கவும் அனுமதிக்கப்பட்டனர். நீலிமலை பாதை இன்று முதல் திறக்கப்படுகிறது. கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து நேற்று முதல் பம்பையில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் சன்னிதானத்தில் இரவில் பக்தர்கள் தங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதற்காக சன்னிதானத்தில் 500 அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே கனமழை காரணமாக சேதமடைந்திருந்த பக்தர்களின் பாரம்பரிய பாதையான நீலிமலை பாதை இன்று திறக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பக்தர்கள் சுப்ரமண்ய பாதை வழியாகத்தான் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்று முதல் இந்த 2 பாதைகள் வழியாகவும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நீலிமலை பாதையில் அவசர மருத்துவ சிகிச்சை மையங்களும் திறக்கப்பட்டுள்ளன….

The post நீலிமலை பாதை இன்று திறப்பு appeared first on Dinakaran.

Tags : Nilimalai route ,Thiruvananthapuram ,Sabarimala ,Bombay ,Sannithan ,Neelimala ,Dinakaran ,
× RELATED சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப...