×

குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா சார்பு நீதிபதி மரக்கன்று நட்டார்

குளித்தலை, ஜூன் 6: உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குளித்தலை நீதிமன்றத்தில் புதிதாக பொறுப்பேற்ற வட்டச் சட்டப் பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் தலைமை ஏற்று நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தமிழரசி, குற்றவியல் நடுவர் பிரகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல் சங்க தலைவர் சாகுல் அமீது, செயலாளர் நாகராஜன், மூத்த வக்கீல்கள் செல்வகுமார், ரத்தினம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா சார்பு நீதிபதி மரக்கன்று நட்டார் appeared first on Dinakaran.

Tags : World Environment Day ,Kuluthlai ,Kulithalai ,Circle Legal Services Committee ,Kulithalai Integrated Court Complex ,Karur District ,Kulithalai Court ,Court ,Complex ,Dinakaran ,
× RELATED அன்னவாசல் பெண்கள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி