×

கரூர், குளித்தலை பகுதியில் கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

கரூர், ஜூன் 6: கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட வனத்துறை ஆகியவை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சண்முக சுந்தரம் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.இந்த நிகழ்வில், அனைத்து நீதிபதிகள், மாவட்ட வன அலுவலர், பார் அசோசியேஷன் தலைவர், நீதிமன்ற ஊழியர்கள், வனத்துறை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பொறுப்பு சொர்ணகுமார் செய்திருந்தார். இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

The post கரூர், குளித்தலை பகுதியில் கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Karur district court complex ,Kulithlai ,Karur ,World Environment Day ,District Legal Affairs Commission ,District Forest Department ,
× RELATED கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம்