×

அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானோர் பங்கேற்பு

அஞ்சுகிராமம், ஜூன் 6: அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று காலை 5 மணி திருப்பலியை பங்கின் ஆசிரியர்கள் வழிபாட்டு குழுவினர் மற்றும் அழகப்பபுரம் இறைமக்கள் சிறப்பித்தனர். காலை 6.30 மணி திருப்பலியை புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியினர் சிறப்பித்தனர். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, தட்டு தேர் பவனி, கொடியேற்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி தலைமை வகித்து கொடியேற்றினார். இரவு 9 மணிக்கு மும்பை வாபி வாழ் அழகை இறை மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவிப் பங்குத்தந்தை மரியசுவின், பங்கு பேரவை துணைத் தலைவர் வி.ஏ.எ.ராஜன், செயலாளர் டி.ற்றி.செல்லத்துரை, துணைச் செயலாளர் ஜார்ஜ் மலர்க்கொடி, பொருளாளர் மரிய ஜார்ஜ், அருட்சகோதரிகள், பங்கு இறை மக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

The post அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Alagappapuram St. Anthony's Temple Festival ,Anjugram ,Alagappapuram St. Anthony's Shrine Festival ,Panka ,Alagappapuram ,St. Anthony ,Alagappapuram St. Anthony's Church Festival ,Dinakaran ,
× RELATED கனகப்பபுரத்தில் ₹15 லட்சம் செலவில்...