×

இந்தோனேசியா ஓபன் சிந்து ஏமாற்றம்

ஜகார்தா: இந்தோனசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். முதல் சுற்றில் தைவானின் வென் சீ ஹ்சு (26வயது, 26வது ரேங்க்) உடன் நேற்று மோதிய சிந்து (28 வயது, 12வது ரேங்க்) முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் அதிரடி காட்டிய சிந்து 21-15 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும்,கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய வென் சீ 21-15, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 10 நிமிடத்துக்கு நீண்டது.

The post இந்தோனேசியா ஓபன் சிந்து ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Indonesia Open Indus ,JAKARTA ,PV ,Sindhu ,Indonesia Open Badminton Series ,Taiwan ,Wen Chee Hsu ,Indonesia Open ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தின்...