×

வீடுபுகுந்து திருட்டு முயற்சி

சாத்தூர், ஜூன் 6: சாத்தூரில் பூட்டிக்கிடந்த வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் திருட முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் ஆனந்த் (57), இவர் சடையம்பட்டியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார்.

பின்னர் நேற்று காலை அவர்கள் திரும்பி வந்துள்ளனர். வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள இரு பீரோக்களையும் உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. ஆனால் பீரோயில் நகை, பணம் இல்லாததால் அங்கிருந்து மர்ம நபர்கள் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரமேஷ் ஆனந்த் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீடுபுகுந்து திருட்டு முயற்சி appeared first on Dinakaran.

Tags : Chatur ,Ramesh Anand ,Chidambaram ,Sadayampatti ,Dinakaran ,
× RELATED சாத்தூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்