×

இரண்டாவது முறை எம்பி

சிவகங்கை, ஜூன் 6: சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்பியாகியுள்ளார். திமுக கூட்டணியில் சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம், அதிமுக சார்பில் சேவியர்தாஸ், பாஜ கூட்டணி சார்பில் தேவநாதன், பகுஜன் சமாஜ் சார்பில் ரஞ்சித்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி மற்றும் 15 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கார்த்தி சிதம்பரம் கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். இதில் 2014ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட நிலையில் 2019 மற்றும் தற்போதைய மக்களவை தேர்தல்களில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக எம்பியாகியுள்ளார்.

The post இரண்டாவது முறை எம்பி appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Karti Chidambaram ,Congress party ,Congress ,Sivagangai Lok Sabha ,DMK ,Saviardas ,AIADMK ,BJP ,Dinakaran ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...