×

சிறப்பு புத்தக கண்காட்சி

ஈரோடு, ஜூன் 6: ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தி ஈரோடு பார் அசோசியேஷன் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் நேற்று முதல் 3 நாள்களுக்கு சிறப்பு புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முருகேசன் தலைமை வகித்து திறந்து வைத்தார். தி ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் குருசாமி, செயலாளர் ராஜா, ஈரோடு அட்வகேட் அசோசியேஷன் தலைவர் துரைசாமி, செயலாளர் சண்முக சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தக கண்காட்சியில் வாங்கு புத்தகங்களுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் உள்ளது என நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் கிளை மேலாளர் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்தார்.

The post சிறப்பு புத்தக கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Book Fair ,Erode ,Erode Bar Association ,New Century Book House ,Integrated Court Complex ,Erode Sampath Nagar ,Dinakaran ,
× RELATED தோல் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி எச்சரிக்கை