- ஜெயக்குமார்
- சென்னை
- முன்னாள் அமைச்சர்
- திமுக
- 2022 உள்ளூர் அமைப்பு தேர்தல்கள்
- ஜெயவர்தன்
- ஜெயக்குமார் மனு
சென்னை: கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஜெயவர்தன் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை விசாரித்த ஆணையம், இருவரின் புகாரையும் முடித்து வைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென்று மாநில மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post ஜெயக்குமார் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.